கோவையில் ‘ஆப்ரேஷன் கந்துவட்டி 2.0’ - போலீசார் அதிரடி சோதனை - ஒரே நாளில் ரூ.1¼ கோடி பறிமுதல் 18-பேர் கைது..!

கோவையில் கந்துவட்டி வசூலினால் பலரும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் வந்தது. இதனால் அதிரடி சோதனை நடத்தப்பட்டு பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.


கோவை: 'ஆப்ரேஷன் கந்துவட்டி 2.0' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கந்துவட்டி வசூலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து, மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் மேற்பார்வையில் 6-துணை எஸ்.பிக்கள், 17 ஆய்வாளர்கள் அடங்கிய 17 தனிப்படையினர் 'ஆப்ரேஷன்கந்துவட்டி 2.0' என்ற பெயரில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கே.ஜி. சாவடி, மதுக்கரை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, சூலூர், உள்பட மாவட்டம் முழுவதும் 41-இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. காலை 6-மணி முதல் 11-மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் கந்துவட்டிக்கு பலரிடம் எழுதி வாங்கி வைத்திருந்த சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கே.ஜி.சாவடி பகுதியில் தொழில் அதிபர் நடராஜன் (62) வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.1-கோடியே 10-லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சொத்து பத்திரங்கள், புரோ நோட்டுகள் உள்ளிட்ட பல ஆவணங்கள் சிக்கின.

கோவை மாவட்டம் முழுவதும் கந்து வட்டி வசூலித்த நபர்களிடம் இருந்து மொத்தம் 379 சொத்து பத்திரங்கள், 3 பாஸ்போர்ட்டுகள், 127 காசோலை புத்தகங்கள், 48 ஏ.டி.எம். கார்டுகள், 18 வங்கி கணக்கு புத்தகங்கள், 54 கையெழுத்திட்ட வங்கி பத்திரங்கள், 211 வாகன ஆர்.சி. புத்தகங்கள், 35 பைனான்ஸ் புத்தகங்கள், 7 ஆதார் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

மேலும், ரூ.1 கோடியே 26 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கந்துவட்டி வசூலில் ஈடுபட்ட செல்வி, நடராஜன், வேலுசாமி (68), பட்டை சவுந்தர்ராஜன், உதயகுமார் (55), இளங்கோ, சரவணன் (42), சுபாஷ் (34), பார் நாகராஜ் என்ற முத்துசாமி(34), மகேந்திரன் (55), திருச்சிற்றம்பலம் குமார் (50), சதீஷ்குமார் (44), மாணிக்கம் (44), ராமர் (55), மாடசாமி (54), செல்வராஜ் (64), ஜனார்த்தனன், ரமேஷ் மற்றும் மணியன் என்ற கிருஷ்ணசாமி ஆகிய 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், வேலுச்சாமி என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை தவிர 18-பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து, மாவட்ட போலீஸ் எஸ்.பி. பத்ரி நாராயணன் கூறும்போது, கோவையில் கந்துவட்டி வசூலினால் பலரும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் வந்தது. இதனால் அதிரடி சோதனை நடத்தப்பட்டு பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என கூறினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...