சேரன்மாநகர், காளப்பட்டி உள்ளிட்ட கிழக்கு மண்டல பகுதிகளில் தலை விரித்தாடும் குடிநீர் பிரச்சனை: 10, 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம்

மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையிலும், கோவை 22 மற்றும் 8 வது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.



கோவை: விரிவுபடுத்தப்பட்ட, கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தின் கீழ் சேரன் மாநகர், நேரு நகர், காளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

மாநகராட்சி 22 மற்றும் 8 வது வார்டு என இரண்டு வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 10 அல்லது 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொடர் மழை காரணமாக, பில்லூர் அணை நிரம்பி வரும் நிலையில், சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படாதது மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடும் குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக, சமந்தப்பட்ட கவுன்சிலர் அலுவலகத்தில் புகார்களை தெரிவிப்பது வாடிக்கையான ஒன்றாக மாறி உள்ளது என்பதே நிதர்சனம் என்று தெரிவிக்கும் மக்கள், பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடத்தும் முன் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரச்சனை குறித்து கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு மற்றும் 8 வது வார்டு கவுன்சிலர் விஜய் ஆகியோர் கூறியதாவது:-



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட 22 வது வார்டு, 8 வது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது உண்மைதான்.

சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 10, 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டுமே ஏழு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக, நேரு நகர், காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 12 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

52 லட்சம் லிட்டருக்கு பதில் 36 லட்சம் லிட்டர் மட்டுமே குடிநீர் வழங்கல்..!

அனைத்து பகுதிகளுக்கும் ஏழு நாட்களுக்கு ஒரு முறை சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளோம். அதிகாரிகளும், தீர்வு காண தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட மூன்று வார்டுகளுக்கு சேர்த்து முன்பு 52 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 36 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. கள நிலவரம் குறித்து பல மக்களுக்கு தெரியவில்லை.

மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீர் சீரான முறையில் விநியோகம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். இதன் காரணமாகவே, 22 வது வார்டு மற்றும் 8 வது வார்டு பகுதிகளில், மாநகர மேயர், கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர். விரைவில், வாரம் ஒரு முறை அனைத்து பகுதிகளுக்கும் சீரான சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...