கோவையில் மாணவி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்: 10-க்கும் மேற்பட்டோர் கைது..!

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.



கோவை: கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு கோவை காந்திபுரம் பகுதியில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.



கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட 12-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதிக்கு நீதி வேண்டி மக்கள் அதிகாரம் அமைப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

அதில், கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதி கோரி மாநகர போலீசில் மனு அளித்தனர். ஆனால் ஶ்ரீமதி மரணம் தொடர்பான போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிறுத்தத்தில் கூடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் போலீஸ் தடையை மீறி ஶ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்களை எழுப்பிகண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 10 க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...