கோவையில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 354 கிலோ குட்கா பறிமுதல் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைது

கோவை கருமத்தம்பட்டி குடோனில் பதுக்கி வைத்திருந்த 354 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம், முழுவதும் குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக குட்கா பொருட்களை மொத்தமாக குடோன்களில் பதுக்கி வைத்து, சில்லரை விற்பனைக்கு அனுப்பி வைப்பவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த சிலர் குட்கா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபடுவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து ஆய்வாளர் ராஜதுறை, உதவி ஆய்வாளர் உதயச்சந்திரன், தலைமையிலான போலீஸார் வாகராயம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த ஒரு குடோனில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் பிடித்து விசாரித்த போது அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ்குமார் (40), ரஞ்சித்குமார் (26), சோகராம் (22), மாதராம் (30), மற்றும் தீபாராம் (27) என்பதும், குடோனில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அதை சட்டவிரோதமாக சில்லரை விற்பனைக்கு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் வைத்திருந்த சுமார் 354 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...