கோம்பர் கழிவு பஞ்சு ஏற்றுமதி மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் - ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் (OSMA) சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை..!

கழிவு பஞ்சு ஏற்றுமதியை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் அதிகம் இருந்தால் ஏற்றுமதி செய்யலாம். ஆனால் இங்கேயே பற்றாக்குறை உள்ளது. கோவையில் இதன் பற்றாக்குறை காரணமாக கோவையிலேயே சில மில்கள் மூடப்பட்டுள்ளதாக OSMA நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை: ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் (OSMA - Open End Spinning mills Association) நிர்வாகிகள் EC உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது விழாவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள OE மில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



தலைவர் G.அருள்மொழி, செயலாளர் K.C. சந்திரசேகரன், துணை தலைவர் R.P செந்தில்குமார், பொருளாளர் சேவியர் பிரான்ஸிஸ், இணை செயலாளர் A. சுரேஷ்குமார், இணை செயலாளர் S.B பாரதி புதிய நிர்வாகிகளாக பதவியேற்றனர். நிர்வாக குழுவுடன் EC உறுப்பினர்கள் 35 பேர் மண்டலம் வாரியாக அனைத்து பகுதியில் இருந்தம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து OSMA நிர்வாகிகள் அனுஷ்ராமசாமி, முருகேசன், அருள்மொழி, சந்திரசேகரன் கூறியதாவது:-

OE மில்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் மத்திய மாநில அரசிடம் பேசி தீர்வு காணவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வட இந்திய ரோடார் சங்கத்துடன் பானிபட் இணைந்து செயல்பட்டு மத்திய அரசிடம் OE மில் துறை சம்மந்தம் ஆன கோரிக்கை மனுவை அளிப்பது போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காட்டன் கோம்மர் நாயில் பற்றாக்குறையாக உள்ளது. OE மில்களின் முக்கிய மூலப்பொருளாக கோம்பர் நாயில் காட்டன் கழிவு பஞ்சு உள்நாட்டு தேவைக்கு போக மீதம் இருந்தால் மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் ஏற்றுமதி வரி கிலோவிற்கு ரூபாய் 20 விதித்து கோம்பர் கழிவு பஞ்சு ஏற்றுமதி மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

கழிவு பஞ்சு ஏற்றுமதியை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் அதிகம் இருந்தால் ஏற்றுமதி செய்யலாம். ஆனால் இங்கேயே பற்றாக்குறை உள்ளது. கோவையில் இதன் பற்றாக்குறை காரணமாக கோவையிலேயே சில மில்கள் மூடப்பட்டுள்ளன. கோவையில் 75 மில்கள் உள்ளன. ஜவுளித்துறை மிகுந்த சிரமத்தில் உள்ளன. மின் கட்டண உயர்வு மேலும் ஒரு சுமையாக உள்ளது.

(Recycle - Re use) மறுசுழற்சி என்ற முறையில் OE மில்களில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைபர் (used plastic pet bottle fibre), கார்மெண்ட் கட்டிங் வேஸ்ட் பழைய துணி வகைகள் ஆகியவற்றில் இருந்து 40க்கும் மேற்பட்ட கலர் நூல் உற்பத்தி செய்யப்பட்டு ஏழை மக்கள் பயன்படுத்தும் வகையில் குறைந்த விலையில் பெட்ஷீட், தலையணை உறை, காடா துணிகள், திரை துணிகள், மிதியனை நைட்டி உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பதற்கான நூல்கள் ஜவுளி பொருட்கள் OE மில்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

மறுசுழற்சி முறையில் அனைத்து கழிவு பஞ்சு, பழைய பெட் பாட்டில்கள் துணிவகைகள் OE மில்களில் மூலப்பொருளாக பயன்படுத்தி நூல் உற்பத்தி செய்வதால் நீர் நிலைகள், கடல் நீர், மற்றும் பூமியை மாசுபடாமல் சுற்றுச்சூழலை காப்பாற்றும் ஒப்பற்ற சேவையை OE மில்கள் செய்து வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் 600 க்கும் மேற்பட்ட OE மில்கள் இயங்கி வருகிறது. இதில் இருந்து 25 லட்சம் கிலோ காட்டன் நூலும், 15 லட்சம் கிலோ மறுசுழற்சி கலர் நூலும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் 2 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைகின்றனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் எங்கள் வெள்ளி விழா ஆண்டுவிழா நடைபெற உள்ளது. அனைத்து அமைச்சர்களையும் அழைக்க உள்ளோம்.

இவ்வாறு தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...