இது வாக்கிங் டிராக்கா? ரேசிங் டிராக்கா..? ரேஸ்கோர்ஸ் நடை பயிற்சியாளர்கள் புகார் - வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை..!

ரேஸ்கோர்ஸ் ரவுண்டானா நடைபாதையில் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குபவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக நடை பயிற்சியாளர்கள் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சாலை வழியாக வாகனங்களை இயக்க போதுமான இட வசதி உள்ள போதும், ரவுண்டானா பகுதியில் உள்ள நடைப்பயிற்சி நடைபாதையில் வாகனங்களை இயக்கபடுவதாக, புகார் எழுந்துள்ளது.

இது வாக்கிங் டிராக்கா? இல்லை ரேசிங் டிராக்கா..?

பச்சை பசேல் என்ற சூழலில் நடைப்பயிற்சி மேற்கொள்ள சிறந்த இடம் என்றால் கோவை வாசிகளின் நினைவுக்கு உடனே வருவது ரேஸ் கோர்ஸ் பகுதி தான். தினமும், நூற்றுக்கணக்கான ஆண், பெண், மாணவ மாணவியர், விளையாட்டு வீரர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ரேஸ் கோர்ஸ் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

தற்போது, ரேஸ்கோர்ஸ் பகுதி முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருவதால், ஏற்கனவே நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் அசவுகரியத்தை சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில், நடைப்பாதையில் வாகனங்களை இயக்குபவர்களால், நிம்மதியாக நடைப்பயிற்சி மேற்கொள்ள முடிவதில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

இது வாக்கிங் டிராக்கா? இல்லை ரேசிங் டிராக்கா..? என்று கேட்கும் அளவிற்கு இளைஞர்கள் புல்லட், கே.டி.எம், யமஹா பஜாஜ் சுசுகி போன்ற அதிக சத்தம் எழுப்பும். ஸ்போர்ட்ஸ் பைக்களை நடைபயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் இயக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ரேஸ்கோர்ஸ் ரவுண்டானா பகுதியில் சாரதாம்பாள் கோவில் முன்பு துவங்கி காஸ்மோ கிளப் நுழைவாயில் வரை உள்ள நடைபாதையில் இந்த விதிமீறல் அதிகம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

இவ்வாறு போக்குவரத்து விதிக்கு புறம்பாக செயல்படும் வாகன ஓட்டிகள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதி வேகத்தில் வாகனங்களை இயக்குவதால் பெரும் விபத்து நடக்க வாய்ப்புள்ளதாக, நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

புகார் குறித்து பேசிய, கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர், மதிவாணன்: நடைபாதை என்பது பொதுமக்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இடம். அந்த இடத்தில் விதி மீறி அதிவேகத்தில் வாகனங்களை இயக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...