இலங்கை போன்ற நெருக்கடியை இந்தியாவும் சந்தித்து வருகிறது சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரவையில் குழுவின் ஆறு மாத கால சுறுக்க அறிக்கையை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், கோவை மாவட்ட அமைப்புக்குழு ஒருங்கினைப்பாளருமான ஜி.ராமகிருஷ்ணன் முன்வைத்தார்.


கோவை: பேரவை கூட்டத்தை துவக்கிவைத்து பேசிய கே.பாலகிருஷ்ணன், மோடி தலைமையிலான பாஜக அரசு வரலாறு காணாத பணவீக்கத்தை, பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டினால் உலக நாடுகள் இப்படித்தான் நெருக்கடியை சந்தித்து வருவதாக தனது தோல்வியை மறைக்க அடுத்த நாட்டை அடையாளம் காட்டுகிறார்கள்.



பண வீக்கம் உண்மையில் 8 சதவிகிதம் என்று சொன்னாலும், உண்மையில் சில்லரை வணிகத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்கிற நிலை உள்ளது. அந்நிய செலாவணி இருப்பு படிப்படியாக குறைந்து கொண்டே போகிறது.

இதுபோன்ற ஒரு நிலைதான் இலங்கையில் ஏற்பட்டது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததன் காரணமாகத்தான் அந்நாடு டாலரில் வாங்க வேண்டிய பெட்ரோலி பொருட்கள், எரிபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக அங்கு மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற ஒரு நெருக்கடி தான் இந்திய நாடும் சந்தித்து வருகிறது. டாலர் கையிருப்பு படிப்படியாக தேய்ந்து கொண்டே இருக்கிறது. மறுபுறம் வேலையின்மை 9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. விவசாயம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு பதிலாக மக்கள் நலத்திட்டங்களுக்கான மானியங்களை வெட்டிச்சுறுக்குகிறது. கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதியை குறைக்கிறது. இலவசம் தேவையில்லை என பிரதமர் மோடி பேசுகிறார். மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள், நிவாரணங்களைக்கூட ஒன்றிய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்துகிறது. நாட்டை காப்பாற்ற முடியுமா என்கிற ஐயம் எழுந்துள்ளது. நாடு பின்னோக்கி இழுக்கிற வேலையை பாஜக அரசு செய்கிறது.



ஆனால் அம்பானி, அதானி சொத்துக்களின் மதிப்புகள் மட்டும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இந்த நெருக்கடி குறிது பேச அனுமதிப்பதில்லை. ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் எந்தந்த வர்த்தைகளை பேசக்கூடாது என்கிற பட்டியல் போடுகிறார்கள். இந்த பட்டியலை பார்த்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோடி ஆட்சியில் பாராளுமன்றத்தில் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க முடியும். நெருக்கடியில் உழலுகிற மக்களின் மனங்கள் எரிமலையாய் கொதிப்பதை அறிய முடிகிறது. இதனை திசைதிருப்பத்தான் பிரிதாலும் சூழ்ச்சிகயை திட்ட மிட்டு பாஜக ஏற்படுத்துகிறது.

இதற்கான பணிகளை மிக தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். நாடு எப்போதும் மதக்கலவர சூழல் இருந்து கொண்டே இருப்பதுதான் தனக்கு ஆதாயம் என்று பாஜக நினைக்கிறது. இத்தகைய நிலையில் இருந்து நாட்டை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழியும் இயக்கங்களை வெற்றிகரமாக்கிடவும், அதில் வெகுமக்கள் திரளாக பங்கேற்கவைப்பதிலும் கட்சியின் ஊழியர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

சிறப்பு பேரவையில் 38 பேர் கொண்ட கோவை மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளராக சி.பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டார். மேலும்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக ஏ.ராதிகா, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.மனோகரன், கே.அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ், யு.கே.சிவஞானம், ஆர்.கோபால், வி.தெய்வேந்திரன், வி.சுரேஷ், என்.ஆர்.முருகேசன், வி.ஆர்.பழனிச்சாமி, என்.ஆறுச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...