40-அடி சாலை அமைக்க வேண்டிய இடத்தில் வெறும் 12-அடி மட்டுமே சாலை அமைக்கப்படுவதை கண்டித்து, அகில பாரத இந்து மகா சபா தேசிய ஒருங்கிணைப்பாளரும், மாநில இளைஞரணி தலைவருமான சுபாஷ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை: முறையாக சாலை அமைத்து தரக்கோரி கோவை துடியலூர் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை துடியலூர் அருகே பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட பன்னிமடை- திப்பனூர் சாலை உள்ளது. இந்த பகுதியில் 4 வருடங்களாக சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இந்த நிலையில் 40 அடி சாலை அமைக்க வேண்டிய இடத்தில் வெறும் 12 அடி மட்டுமே சாலை அமைப்பதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்ததும் அகில பாரத இந்து மகா சபா தேசிய ஒருங்கிணைப்பாளரும், மாநில இளைஞரணி தலைவருமான சுபாஷ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தடாகம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் 40 அடிக்கு சாலை அமைக்கலாம். ஆனால் வெறும் 12 அடிக்கே அமைக்கின்றனர்.
இதனால் மற்ற வாகனங்களுக்கு வழிவிடும் வகையில் சாலையை விட்டு இறங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே 16 அடிக்காவது சாலையை அமைக்க வேண்டும் என்றனர். இதையடுத்து அரசு அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.