திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி முகாம்

கொரோன தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள அரசு சார்பில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


திருப்பூர்: கொரோன தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள அரசு சார்பில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனாவின் தாக்கம் கடந்த மூன்று அலைகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இதுவரை 5 ஆயிரத்து, 279 பேர் கொரோன தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 352 பேர் இறந்துள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 24 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை 18 வயது உட்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசி 82 சதவிதமும், 2ம் தவணை 67 சதவிதமும் போடப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 6 மாதங்கள் கழித்து போஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இந்த பூஸ்டர் தடுப்பூசியானது கடந்த 15-ந்தேதி முதல் இலவசமாக அனைத்து முகாம்களிலும் போடப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அரசு சார்பில் நடத்தப்படும் கொரோன தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...