கோவையில் 6-வது புத்தக திருவிழாவை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கோவை கொடிசியா வளாகத்தில் 6-வது புத்தக திருவிழாவை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டு சில புத்தகங்களையும் வாங்கினார். இந்த விழா இன்று முதல் தொடங்கி வரும் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.



கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் 6-வது புத்தக திருவிழாவை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டு சில புத்தகங்களையும் வாங்கினார்.



இந்த விழா இன்று முதல் தொடங்கி வரும் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.



கொடிசியா வளாகத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் மொத்தம் 280 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.



200க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள், புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.



மேலும், இதில் பெரியார், கலைஞர், அப்துல்கலாம், திருவள்ளுவர் ஆகியோரின் சிலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தென்னிதிய புத்தக விற்பணையாளர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த புத்தக திருவிழா நடைபெறுகிறது, என்றும் 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் வரும் 28ம் தேதி 5000 மாணவர்கள் கலந்துகொண்டு திருக்குறள் வாசிக்கும் நிகழ்வு நடைபெறும், என்றும், புத்தக கண்காட்சியில், 2 லட்சத்து, 50 ஆயிரம் தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கபட்டுள்ளது. 

இதில், 250 பதிப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். பயனுள்ள நூல்கள் இங்கு காட்சி படுத்தபட்டுள்ளன என்றும் அரசு பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக, தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...