வெளிநாட்டு வாழ் இந்தியர் மற்றும் கவுன்சிலரின் நிதி உதவியால், சேரன் மாநகர் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி...!

வார்டு எண் 22 சேரன் மாநகர் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ரோபோடிக் (robotic) பயிற்சி அளிக்க தன் சொந்த செலவில் ரூ.1.05 லட்சம் வழங்கியுள்ள கவுன்சிலர் பாபுவிற்கு மேயர் மற்றும் துணை மேயர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை சேரன் மாநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ரோபோடிக் (robotic) பயிற்சி அளிக்க, மாமன்ற உறுப்பினர் பாபு, தனது சொந்த செலவில் ரூ.1.05 லட்சம் வழங்கியுள்ளது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.



நேற்று, கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலைக் குழு கலந்தாய்வு கூட்டம், தலைவர் மாலதி தலைமையில் நடைபெற்றது.



கூட்டத்தில், கல்வி பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் நிலை குழு உறுப்பினர், கோவை பாபு பேசுகையில், கோவை மாநகராட்சி 22-வது வார்டில் உள்ள சேரன் மாநகர் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ரோபோடிக் (robotic) பயிற்சி அளிக்கும் திட்டத்திற்காக ரோபோடிக் பயிற்சி உபகரணங்களை (robotic kit) வாங்க தன் சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் (1,05,000) வழங்குவதாக, கூறினார்.



மேலும், இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளருக்கு ஒரு ஆண்டுக்கான ஊதியம் (2022 - 2023) ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் (1,35,000) ரூபாயை அமெரிக்க நாட்டில் வசிக்கும் இந்திய நாட்டை சேர்ந்த கணேஷ் என்பவர் நிதியுதவியாக வழங்கியுள்ளார் என்பதை மகிழ்வோடு தெரிவித்து, மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் இந்த பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்க கல்விக்குழு அனுமதியளிக்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.

அவரது நடவடிக்கைக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிவராம் நகர் பூங்காவில் உள்ள மியாவாக்கி திட்டத்தில் மரங்களைச் சீரமைப்பது, சேரன் மாநகர் நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் இதர அடைப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாநகர மேயரிடம் மனுக்களை, மாமன்ற உறுப்பினர் பாபு அளித்தார்.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...