38-வார்டு பிரச்சனைகளை சீர் செய்ய அதிமுக கவுன்சிலர்கள் கோரிக்கை

கோவை மாநகராட்சி, 38-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிமுக கவுன்சிலர்கள் கூட்டாக ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.



கோவை: கோவை மாநகராட்சி, 38-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிமுக கவுன்சிலர்கள் கூட்டாக ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சி, 38-வது வார்டில் உள்ள ஓணாம்பாளையம், பொம்மனாம்பாளையம், கல்வீராம்பாளையம், அருண் நகர், ஐ.ஓ.பி. காலணி, நல்லாகவுண்டர் வீதி, பொங்காளியம்மன் கோவில் வீதி, பொங்காளி போயர் வீதி, எம்.ஜி.ஆர் வீதி, லட்சுமி நகர், பாலாஜி நகர், காளிதாஸ் நகர், இந்திரா நகர், யூரியோ கார்டன் குருசாமி நகர், பட்டியண்ணன் நகர், நாராயணசாமி நகர் ஆகிய பகுதிகளில் பழுதடைந்து உள்ள சிமெண்ட் சாலைகளை சரி செய்து, புதிய சாலைகள் அமைக்க வேண்டும், மழை நீர் வடிகால் மறு சீரமைப்பு, சிறுபாலம், மூடபலகை அமைத்தல், அடைப்பு நீக்குதல், புதிய தெரு விளக்கு அமைத்தல், குடிநீர் குழாய் கசிவை சீரமைத்தல், போன்ற பல்வேறு அடிப்படை பணிகளை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி அதிமுக கட்சியை சேர்ந்த 38-வது வார்டு கவுன்சிலர்கள் ஷர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் கூட்டாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஆணையர் பிரதாப்பை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



அப்போது பல்வேறு பகுதிகளில் குப்பைகளை முறையாக அகற்றுவதில்லை அவற்றையும் சீர் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...