கோவை மாநகராட்சி, 38-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிமுக கவுன்சிலர்கள் கூட்டாக ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை: கோவை மாநகராட்சி, 38-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிமுக கவுன்சிலர்கள் கூட்டாக ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை மாநகராட்சி, 38-வது வார்டில் உள்ள ஓணாம்பாளையம், பொம்மனாம்பாளையம், கல்வீராம்பாளையம், அருண் நகர், ஐ.ஓ.பி. காலணி, நல்லாகவுண்டர் வீதி, பொங்காளியம்மன் கோவில் வீதி, பொங்காளி போயர் வீதி, எம்.ஜி.ஆர் வீதி, லட்சுமி நகர், பாலாஜி நகர், காளிதாஸ் நகர், இந்திரா நகர், யூரியோ கார்டன் குருசாமி நகர், பட்டியண்ணன் நகர், நாராயணசாமி நகர் ஆகிய பகுதிகளில் பழுதடைந்து உள்ள சிமெண்ட் சாலைகளை சரி செய்து, புதிய சாலைகள் அமைக்க வேண்டும், மழை நீர் வடிகால் மறு சீரமைப்பு, சிறுபாலம், மூடபலகை அமைத்தல், அடைப்பு நீக்குதல், புதிய தெரு விளக்கு அமைத்தல், குடிநீர் குழாய் கசிவை சீரமைத்தல், போன்ற பல்வேறு அடிப்படை பணிகளை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி அதிமுக கட்சியை சேர்ந்த 38-வது வார்டு கவுன்சிலர்கள் ஷர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் கூட்டாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஆணையர் பிரதாப்பை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது பல்வேறு பகுதிகளில் குப்பைகளை முறையாக அகற்றுவதில்லை அவற்றையும் சீர் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.