தமிழ்நாட்டில் முதன்முறையாக, கோவையில் முதல்வரின் காப்பீடு திட்டம் மூலம், இளைஞருக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தம்

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கை கால்களை இழந்த வாலிபருக்கு நவீன எடை குறைந்த கை, கால்கள் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ குழுவினர் பொருத்தினர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.



கோவை: கோவை, அன்னூர் பகுதி, குமரன் குன்று, வேப்பம்பள்ளம் பகுதியை சேர்ந்த சுபாஷ்(22) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராமல் நடந்த மின்சார விபத்தால் இரண்டு கால்களை முழங்காலுக்கு கீழும், இரண்டு கைகளை முழங்கைகளுக்கு கீழும் இழந்தார்.



இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் உதவி வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தார். அந்த மனுவை உடனடியாக பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் தேவையான அரசு மற்றும் மருத்துவ உதவிகளை சம்மந்தப்பட்ட துறை விரைந்து வழங்க உத்தரவிட்டார், இந்நிலையில் கோவை மாவட்ட மறுவாழ்வு அலுவலர் வசந்த் குமார் மற்றும் கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா முதற்கட்டமாக அவருக்கு செயற்கை கை மற்றும் கால் பொருத்திட நடவடிக்கை எடுத்தனர்.

அதனை அடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி முட நீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சை இயக்குனர் வெற்றிவேல் செழியன் தலைமையில் செயற்கை அங்க வடிவமைப்பாளர்கள் பாலசந்தர், ஆனந்த் பாபு, ஜெகன் கோகுல்ராஜ் ஆகியோர் கொண்ட குழு தமிழக அரசின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் எடை குறைந்த இரு செயற்கை கைகள் மற்றும் கால்களை இலவசமாக பொருத்தினர்.

மேலும் அவருக்கு மனப்பயிற்சி உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி ஆகியவை உடற்பயிற்சி நிபுணர்களால் வழங்கப்பட்டன.

இரண்டு கை, கால்களை இழந்தவர்க்கு அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கை, கால்கள் பொறுத்தபடுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.



இன்று கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த சுபாஷ் தனக்கு பொருத்தப்பட்டுள்ள செயற்கை கால்களை காண்பித்து செயற்கை கைகளால் கைகுலுக்கியும், நன்றி தெரிவித்தார்.



இதனை சிறப்பாக செய்த அரசு மருத்துவமனையை சார்ந்த மருத்துவ குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் பாராட்டுகளை தெரிவித்தார்.



Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...