கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) முதலமைச்சருக்கு வேண்டுகோள்..!

மின்‌ கட்டண உயர்வில்‌ இருந்து குறுந்தொழிற்‌ கூடங்களுக்கு விலக்கு அளித்து, குறுந்தொழில்களையும்‌ குறுந்தொழில்‌ முனைவோரையும்,‌ அவர்களை நம்பி இருக்கின்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களின்‌ வாழ்வாதாரங்களையும்‌, பாதுகாத்து உதவும்‌ வகையில்‌ மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறுந்தொழில் கூடங்களுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு கோருதல் தொடர்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) கூறியதாவது:-

கடந்த 18.07.2022 அன்று, தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்‌ செந்தில்‌ பாலாஜி, குறுந்தொழில்‌ கூடங்களுக்கான மின்சார உபயோக கட்டணம்‌ உயர்த்தப்படும்‌ என்று அறிவித்திருந்தார்.

ஏற்கனவே ஜிஎஸ்டி வரி, கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு, மூலப்பொருள்‌ விலை உயர்வு மற்றும்‌ பொருளாதார மந்த நிலை ஆகியவற்றால்‌ பாதிக்கப்பட்டு, குறுந்தொழில்‌ முனைவோர்‌ தங்கள்‌ தொழிலை தொடர்ந்து நடத்த கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்‌.

இந்நிலையில்,‌ மின்சார உபயோக கட்டணம்‌ உயர்த்தப்படும்‌ என்ற அறிவிப்பு அவர்களை மேலும்,‌ நெருக்கடியில்‌ தள்ளும்‌ விதமாக அமைந்துள்ளது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஆகிய தாங்கள்‌, குறுந்தொழில்‌ முனைவோர்களின்‌ சிரமங்களை கருத்திற்கொண்டு, மின்‌ கட்டண உயர்வில்‌ இருந்து குறுந்தொழிற்‌ கூடங்களுக்கு விலக்கு அளித்து, குறுந்தொழில்களையும்‌ குறுந்தொழில்‌ முனைவோரையும்‌ அவர்களை நம்பி இருக்கின்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களின்‌ வாழ்வாதாரங்களையும்‌, பாதுகாத்து உதவும்‌ வகையில்‌ மின்‌ கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து குறுந்தொழில்களை பாதுகாத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்‌.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...