கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை - வடமாநில நபர் கைது; 40- கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!

கஞ்சாவை பொட்டலமாக விற்றால் காவல்துறையிடம் வசமாக மாட்டிக் கொள்வோம் என்பதால், சாக்லேட் வடிவில் ஒரு கஞ்சா சாக்லேட், ரூ.100 என விற்ற இளைஞரை போலீசார் கைது செய்து மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நகரில் ஏராளமான கல்லூரிகள் உள்ளதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா, போதை மாத்திரை விற்பனை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து, கஞ்சா கடத்தலில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டாலும், கஞ்சா புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனம்.

கஞ்சாவை நேரடியாக விற்றால் பிடிபடுவதாக கருதும் கடத்தல் நபர்கள், கஞ்சாவை வித்தியாசமான முறையில் பேக்கிங் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி, கோவையில் சாக்லேட் வடிவில் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் குறிப்பாக பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கஞ்சா சாக்லேட், ரூ.100 என விற்று வந்த நபரை ஆர்.எஸ்.புரம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ள நிலையில், இவர்கள் நெட்வொர்க்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக, அந்த இடத்துக்கு, உதவி கமிஷனர்கள் மணிகண்டன், வேல்முருகன், இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது கஞ்சா சாக்லேட்களை விற்று வந்த சேத்தன் (30) என்பவரை கையும் களவுமாக பிடித்தனர்.



அவரிடம் இருந்து 40 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது.



விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், கோவை ரங்கே கவுண்டர் வீதியில் டீக்கடை மற்றும் கோவில்பாளையம் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இந்த கஞ்சா சாக்லேட் விற்பனையில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கஞ்சா சாக்லேட்டை உட்கொள்பவர்கள், போதையால் பாதிக்கப்படுவதுடன், சிறுநீரக கோளாறு, கல்லீரல் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனையை முழுவதும் கட்டுப்படுத்த சோதனையை மேலும் தீவிரப்படுத்த போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...