திருப்பூரில் பொதுத்தேர்வு முடித்த மாணவ-மாணவியர்களுக்கு நான் முதல்வன் கல்வி திட்டத்தின் கீழ் திறனாய்வு தேர்வுகள்..!

12-ம் வகுப்பு தேர்வு முடித்த மாணவ-மாணவியர்களுக்கு நான் முதல்வன் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் மென்பொருள் நிறுவனம் இணைந்து மாணவ- மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகைக்கான திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் பொதுத் தேர்வு முடித்த மாணவ மாணவியர்களுக்கு நான் முதல்வன் கல்வி திட்டத்தின் கீழ் திறனாய்வு தேர்வுகள் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடித்த மாணவ மாணவியர்களுக்கு நான் முதல்வன் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தனியார் மென்பொருள் நிறுவனம் இணைந்து மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகைக்கான திறனாய்வு தேர்வு இன்று நடத்தப்பட்டது.



திருப்பூர் பெரிய கடைவீதியில் உள்ள கே எஸ் சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த தேர்வில் திருப்பூர் மற்றும் பல்லடம் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.



தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் ஒரு வருடம் ஊதியத்துடன் கூடிய பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் உயர் கல்விக்கான செலவும் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வை இன்று திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் திருவளர்செல்வி துவக்கி வைத்தார். மாவட்டத்திற்கு 75 பேர் என தமிழ்நாடு முழுவதும் 2000 மாணவ மாணவிகளை தேர்ந்தெடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...