தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மாவட்ட துணை இயக்குனர் அருணா தகவல்

அனைத்து அங்கன்வாடி மையங்கள் துணை சுகாதார நிலையங்கள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரண்டு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் ஜூலை 18- ந்தேதி திங்கட்கிழமை முதல் வரும் 30ம் தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அருணா விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறையின் சார்பில் ஆண்டுதோறும் 'தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்' நடைபெற்று வருகிறது.

இந்த முகாம்' இரு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது இதன் நோக்கம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வயிற்றுப்போக்கால் இறப்பதை முற்றிலும் தடுப்பதே ஆகும், நம் நாட்டில் 5-வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு 10 சதவீதம் தீவிர வயிற்று போக்கினால் ஏற்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்டத்தில் ஜூலை 18-ந்தேதி தொடங்கி வரும் 30-ந்தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள்.



மேலும் அனைத்து அங்கன்வாடி மையங்கள் துணை சுகாதார நிலையங்கள் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இரண்டு வார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது.



இதனால் 5-வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர வயிற்றுப்போக்கால் இறப்பதை முற்றிலும் தடுக்கப்படும் என்றும் மேலும் 5-வயது குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு ஒரு [ஓ.ஆர்.எஸ்] பொட்டலம் வழங்கப்படும், இதன் மூலமாக மாவட்டத்தில் 3 லட்சத்து, 37 ஆயிரத்து, 107 பேர் பயன்பெறுவர் என்றும் எனவே 5-வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள குடும்ப பெற்றோர்கள் இந்த முகாமிற்கு சென்று தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு மருந்து பெற்று பயன்படுத்தி கொள்ளலாம் என அதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...