உயிருக்கு அச்சுறுத்தல்.. கோவையில் வழக்கறிஞர் சாலையில் அமர்ந்து தர்ணா..!

வழக்கு விவகாரத்தில் போலி கையெழுத்திட்டு பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது புகாரளித்ததால் கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கறிஞர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.


கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு சாலையில் அமர்ந்து வழக்கறிஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் ராம். இவர், நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் மீரா லோகநாதன், ராஜராஜேஸ்வரி, விஜயசந்திர லட்சுமி மற்றும் கிருஷ்ணாராஜ் ஆகியோர் இரு வழக்குகளில் தன்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு வக்காளத்து மாற்றம் செய்ததோடு வழக்குகளில் தனது கையெழுத்தை போலியாக போட்டு சுமார் 20 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பார் கவுன்சிலில் புகாரளித்துள்ளார்.



இது தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் தனியார் விடுதிக்கு இது தொடர்பாக பேச அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பார்கவுன்சிலில் கொடுத்த புகாரை திரும்ப பெற நிர்பந்திப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



இதனால் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் எனவே தனக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...