இலவச வீட்டு மனை பட்டாவை உடனடியாக வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

இலவச வீட்டு மனை பட்டாவை உடனடியாக வழங்க கோரி மதுக்கரையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: இலவச வீட்டு மனை பட்டாவை உடனடியாக வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை மதுக்கரையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் மதுக்கரை பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் வசித்து வருவதாகவும், கடந்த 20 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்து இருந்ததாகவும், கடந்த 2015-ம் ஆண்டு மாவட்ட ஆட்சி தலைவரின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் நேரில் விசாரணை மேற்கொண்டு ஏழை எளிய மக்களின் குடும்பங்களின் நிலை அறிந்து தேர்வு செய்து இலவச வீட்டுமனை பட்டாக்களை தயார் செய்து போட்டு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில தனி நபர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க கூடாது என கடந்த ஆட்சியில் தடுத்து வந்தனர். கடந்த ஆறு ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் போட்டு வைக்கப்பட்டும் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் போட்டு வைக்கப்பட்டு தயாராக உள்ள பட்டாக்களை உடனே வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...