கோவையில் உடற்கூறு ஆய்வு பணிகளுக்கு ரூ.2-ஆயிரம் லஞ்சம்: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!

உடற்கூறு ஆய்வு பணிகளுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் மற்றும் தனக்கு ரூ.2 ஆயிரம் வேண்டும் என சரவணம்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் அருளானந்தம், இறந்தவரின் உறவினர்களிடம் வாங்கியதால் பணியிடை நீக்கம்.


கோவை: கோவையில் உடற்கூறு ஆய்வு பணிகளுக்கு ரூ.2-ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் கடந்த ஜூன் 23-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முன்னதாக இறந்த பாலமுருகன் உடலை வீட்டில் இருந்து மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பாலமுருகன் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.4 ஆயிரம் ரூபாய் மற்றும் தனக்கு ரூ.2 ஆயிரம் வேண்டும் என சரவணம்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் அருளானந்தம், இறந்த பாலமுருகனின் உறவினர்களிடம் வாங்கியதாகத் தெரிகிறது.

இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் தற்கொலை செய்து இறந்தவர் உறவினர்களிடமிருந்து லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் அருளானந்தத்தை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...