2022-23 நிதியாண்டில் தாட்கோ மூலம் 20-கோடி அளவில் கடன் உதவி வழங்க இலக்கு: கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்..!

2022-23ம் நிதி ஆண்டில் தாட்கோ மூலம் நிலம் வழங்குதல் மற்றும் நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 984-நபர்களுக்கு 6.26-கோடி மானியத்துடன் கூடிய 20.85-கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



கோவை: 2022-23 நிதியாண்டில் தாட்கோ மூலம் 20-கோடி அளவில் கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

2022-23ம் நிதி ஆண்டில் தாட்கோ மூலம் நிலம் வழங்குதல் மற்றும் நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 984-நபர்களுக்கு 6.26-கோடி மானியத்துடன் கூடிய 20.85-கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி எஸ்.சமீரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடந்த நிதியாண்டில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த 38-நபர்களுக்கு 66.96-லட்சம் மானியத்துடன் கூடிய 2.23 கோடி கடனுதவியும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 34 நபர்களுக்கு 56.36 லட்சம் மானியத்துடன் கூடிய 1.87 கோடி கடன் உதவியும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதாரக் கடன் உதவி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 360 மகளிர் குழுக்களுக்கு 75 லட்சம் மானியத்துடன் கூடிய 2.50 கோடி கடன் உதவியும் என மொத்தம் 432 நபர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2022-23 நிதியாண்டில் தாட்கோ மூலம் நிலம் வழங்குதல் மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் பழங்குடியின வகுப்பை சார்ந்த 18 நபர்களுக்கு 49.50 லட்சம் மானியத்துடன் கூடிய 1.65 கோடி கடன் உதவியும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 156 நபர்களுக்கு 2.16 கோடி மானியத்துடன் கூடிய 5.20 கோடி கடன் உதவியும் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 114 நபர்களுக்கு 7.20 கோடி கடன் உதவியும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதாரக் கடன் உதவி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சார்ந்த 696 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 4.80 கோடிக்கண உதவியும் என மொத்தம் 984 நபர்களுக்கு 6.26 கோடி மானியத்துடன் கூடிய 20.85 கோடி கடனுதவி வழங்க எனக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...