கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு - பட்டபகலில் துணிகரம்…!

பீரோ உடைக்கப்பட்டு 3.3 பவுன் நகைகள் திருட்டுப் போனது தெரியவந்தது. சம்பவம் குறித்து செட்டிபாளையம் காவல் துறையினர் திருட்டு நடந்த வீட்டிற்க்கு வந்து, பீரோ மற்றும் கதவில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.


கோவை: கோவை மலுமிச்சம்பட்டி பகுதி குருவாயூர் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (28). எலக்ட்ரிசியன் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி மஞ்சு என்பவருடன் வசித்து வருகிறார்.

இன்று காலை 9 மணிக்கு வெங்கடேஷ் வழக்கம் போல பணிக்குச் சென்றுள்ளார். பின்னர், 11.45 மணியளவில் அவரது மனைவி மஞ்சு, ஓத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

சுமார் 2 மணி நேர இடைவெளிக்குள்அவரது வீட்டின் அருகே வசிக்கும் ருக்மணி என்பவர் மஞ்சுவை அழைத்து, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த மஞ்சு, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.



இதையடுத்து, உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு 3.3 பவுன் நகைகள் திருட்டுப் போனது தெரியவந்தது. இதையடுத்து, வெங்கடேஷுக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவம் குறித்து வெங்கடேஷ்அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் காவல் துறையினர்திருட்டு நடந்த வீட்டிற்க்கு வந்து, பீரோ மற்றும் கதவில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...