நீட் நுழைவு தேர்வு: கோவையில் 7 மையங்களில் 5,400 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்

கோவை மாநகரில் சவுரிபாளையத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா, புறநகரில் மேட்டுப்பாளையம், அன்னூர், ஈச்சனாரி, கண்ணம்பாளையம், குரும்பபாளையம், சூலூர் என 7 மையங்களில் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.



கோவை: பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்புகள் மற்றும் ஆயுஷ் எனப்படும் இயற்கை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி, நாடு முழுவதும்: எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான 'நீட்' நுழைவு தேர்வு, இன்று நாடு முழுவதும் 3,500 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை, 18.72 லட்சம் மாணவ மாணவிகள் எழுதவுள்ளன.



அதன்படி, கோவை மாநகரில் சவுரிபாளையத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா, புறநகரில் மேட்டுப்பாளையம், அன்னூர், ஈச்சனாரி, கண்ணம்பாளையம், குரும்பபாளையம், சூலூர் என 7 மையங்களில் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.



மாணவர்களின் ஹால் டிக்கெட், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, 11.45 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.



மொபைல் போன்' உள்ளிட்ட இவ்விதமான எலக்ட்ரானிக் பொருட்கள், காகிதங்கள் குறிப்புகள் உள்ளிட்டவை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்றும் தொப்பி, 'வாட்ச், பெல்ட், ஷூ' அணிந்திருக்கக் கூடாது. கம்மல், மூக்குத்தி, தலை 'கிளிப்' உள்ளிட்ட, ஆபரணங்கள் அணிந்திருக்கக் கூடாது. முழுக்கை சட்டை அணியக் கூடாது. மெல்லிய வகை ஆடை, சாதாரண காலணிகள் அணிந்திருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.



இந்த நிலையில், மதிய வேலை உணவு சாப்பிடாமல் தேர்வு எழுத போவது மாணவர்களுக்கு பின்னடைவாக இருக்கும் என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...