கோவை மாநகரில் சவுரிபாளையத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா, புறநகரில் மேட்டுப்பாளையம், அன்னூர், ஈச்சனாரி, கண்ணம்பாளையம், குரும்பபாளையம், சூலூர் என 7 மையங்களில் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
கோவை: பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்புகள் மற்றும் ஆயுஷ் எனப்படும் இயற்கை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி, நாடு முழுவதும்: எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான 'நீட்' நுழைவு தேர்வு, இன்று நாடு முழுவதும் 3,500 மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வை, 18.72 லட்சம் மாணவ மாணவிகள் எழுதவுள்ளன.
அதன்படி, கோவை மாநகரில் சவுரிபாளையத்தில் உள்ள கேந்திரிய வித்தியாலயா, புறநகரில் மேட்டுப்பாளையம், அன்னூர், ஈச்சனாரி, கண்ணம்பாளையம், குரும்பபாளையம், சூலூர் என 7 மையங்களில் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
மாணவர்களின் ஹால் டிக்கெட், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, 11.45 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
மொபைல் போன்' உள்ளிட்ட இவ்விதமான எலக்ட்ரானிக் பொருட்கள், காகிதங்கள் குறிப்புகள் உள்ளிட்டவை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்றும் தொப்பி, 'வாட்ச், பெல்ட், ஷூ' அணிந்திருக்கக் கூடாது. கம்மல், மூக்குத்தி, தலை 'கிளிப்' உள்ளிட்ட, ஆபரணங்கள் அணிந்திருக்கக் கூடாது. முழுக்கை சட்டை அணியக் கூடாது. மெல்லிய வகை ஆடை, சாதாரண காலணிகள் அணிந்திருக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மதிய வேலை உணவு சாப்பிடாமல் தேர்வு எழுத போவது மாணவர்களுக்கு பின்னடைவாக இருக்கும் என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.