கோவையில் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமான நபருக்கு 2.6 ஆண்டு சிறை - ரூ.6 ஆயிரம் அபராதம்…!

அஜாக்கிரதையாகவும், கவனக் குறைவாகவும் வாகனத்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி ஒருவரது உயிரிழப்புக்கு காரணமான இருந்த குற்றத்துக்காக, பிரதாப் என்பவருக்கு 2.6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார்.


கோவை: கோவை பீளமேடு அருகே விபத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு காரணமான வாகன ஓட்டிக்கு 2 ஆண்டு, 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார்.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் தனது இருசக்கர வாகனத்தில் பீளமேடு பெரிய தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த பிரதாப் என்பவர் இருசக்கர வாகனத்தை அதி வேகமாக ஓட்டி வந்து குருசாமி மீது மோதி உள்ளார். விபத்தில் தூக்கி வீசப்பட்ட குருசாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக, கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அஜாக்கிரதையாகவும், கவனக் குறைவாகவும் வாகனத்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி ஒருவரது உயிரிழப்புக்கு காரணமான இருந்த குற்றத்துக்காக இரண்டு ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ 6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...