கோவை ஈச்சனாரி தனியார் விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து பலி…!

சம்பவத்தன்று விடுதியில் இருந்த போது, திடீரென அஜய்குமார் வாந்தி எடுத்து மயங்கினார். உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர், இன்று காலை ஈச்சனாரி அருகே அவர் தங்கியிருந்த அறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவரது மகன் அஜய்குமார் (19). இவர் மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இதற்காக அவர் ஈச்சனாரியில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து தங்கி, கல்லூரிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று விடுதியில் இருந்த போது, திடீரென அஜய்குமார் வாந்தி எடுத்து மயங்கினார். இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அஜய்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...