கோவையில் பணியின் போது ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் வயிற்றில் சுட்டுக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு...!

கோவையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றுபவர் காளிமுத்து (29). இவர் அரசு பொருட்காட்சி நடக்கும் இடத்தில் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தனது துப்பாக்கியால் வலதுபுற வயிற்று பகுதியில் தன்னை சுட்டுக்கொண்டதாக தெரிகிறது.



கோவை: கோவை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெறும் பொருட்காட்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றுபவர் காளிமுத்து (29). இவர் அரசு பொருட்காட்சி நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அப்போது தனது துப்பாக்கியால் வலதுபுற வயிற்று பகுதியில் தன்னை சுட்டுக்கொண்டதாக தெரிகிறது.

வயிற்றில் துப்பாக்கியால் சுட்ட நிலையில் பின் பக்கமாக துப்பாக்கி குண்டு துளைத்து வெளியே வந்துள்ளது. உடனடியாக, காவலர் காளிமுத்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இளம் வயது காவலர் ஒருவர் பணியின் போது, துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...