விபத்து குறித்து ஆட்டோ ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை துடியலூர் அருகே ஆட்டோ மோதியதில் 3-பேர் சாக்கடையில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
கோவையை அடுத்த துடியலூர் காவல் நிலையம் அருகே ஆட்டோ ஒன்று வேகமாக வந்ததுள்ளது. அந்த ஆட்டோ திடீரென்று அந்த வழியாக சென்ற பள்ளி மாணவி உள்பட 3 பேர் மீது மோதியது. இதில் அவர்கள் 3 பேரும் அருகில் இருந்த சாக்கடை கால்வாய்க்குள் தூக்கி வீசப்பட்டனர்.
இதில், அவர்கள் படுகாயம் அடைந்தனர். அந்த ஆட்டோவுடன் டிரைவரும் சாக்கடைக்குள் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் விரைந்து சென்று சாக்கடைக்குள் இறங்கி 4 பேரையும் மீட்டனர்.
தகவலறிந்து வந்த போலீசாரும் விரைந்து வந்து, படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ டிரைவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், ஆட்டோவை ஓட்டி வந்தவர் தொப்பம் பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பதும், இவர் பழைய ஆட்டோவை விலைக்கு வாங்கியதும், மது குடித்து விட்டு போதையில் அவர் ஆட்டோ ஓட்டி வந்ததால் விபத்தில் சிக்கியதும் தெரிய வந்தது.
எனவே அவர் மது போதையில் இருப்பதை உறுதி செய்ய போலீசார் கருவி மூலம் சோதனை நடத்த முயன்றனர். அதற்கு அவர் ஒத்துழைக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனாலும் ஒரு வழியாக மோகன்ராஜிடம் போலீசார் மது போதை சோதனை நடத்தினர். மேலும் விபத்து குறித்து மோகன்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.