சென்னையில் 28-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்கம்: கிராமப்புற மாணவர்களை பங்கெடுக்க வைக்க பொள்ளாச்சியில் விழிப்புணர்வு..!

செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பள்ளி வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் ஒட்டும் பணிகள் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் நடைபெற்று வருகிறது.


கோவை: சென்னையில் 28-ம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்கம் கிராமப்புற மாணவர்களை பங்கெடுக்க வைக்க பொள்ளாச்சியில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பள்ளி வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் வருகிற 28-ம் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளது. இது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்காக பொள்ளாச்சி சார் ஆட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நேர்முக உதவியாளர் வெங்கடாசலம், ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் தணிகைவேல் மற்றும் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வருகின்ற ஜூலை 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடக்கும் இந்த போட்டிகள் குறித்து பொது மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கிராமப்புற மாணவர்களை பங்கெடுக்க வைக்க கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், மாரத்தான் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி கல்லூரி மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் பள்ளி வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் ஒட்டும் பணிகளும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சார்பில் நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...