நீலகிரியில் தொடர் மழை: குந்தா உட்பட 3-அணைகள் திறப்பு..!

குந்தா, 89 அடி, பில்லுார், 100 அடி, சாண்டிநல்லா, 49 அடி என, மூன்று அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி அணைகள் திறக்கப்பட்டு, மதகுகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை தொடர்வதால், குந்தா, சாண்டிநல்லா, பில்லூர் அணைகள் திறக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக, கூடலூரில், 227 மி.மீ., அவலாஞ்சியில் 195, அப்பர் பவானியில் 179 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

பலத்த காற்று வீசியதால், ஊட்டியின் பல இடங்களில் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தது. எச்.பி.எப்., பகுதியில் மரம் விழுந்து, ஒரு கார் சேதமானது. ஏ.டி.சி., பிரதான சாலையில் மரம் விழுந்து, 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள், மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். அறுந்து விழுந்த மின்கம்பி ஊட்டி தலைகுந்தாவில், பலத்த காற்றுக்கு, 110 கே.வி., உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது.

மின்தடை ஏற்பட்டு இருந்தால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எடக்காடு பகுதியில், தேயிலை தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மண்சரிவு ஏற்பட்டு தேயிலை செடிகள் அடித்து செல்லப்பட்டன.

இத்தலார், எமரால்டு, பாலாடா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு, காய்கறி தோட்டங்கள் பாதிக்கப்பட்டன. 'அடுத்த இரண்டு நாட்கள் மழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் பேரிடர் தடுப்பு நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.

456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

மூன்று அணைகள் திறப்பு அணைகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. குந்தா, 89 அடி, பில்லுார், 100 அடி, சாண்டிநல்லா, 49 அடி என, மூன்று அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி அணைகள் திறக்கப்பட்டு, மதகுகளில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...