கோவை பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம்..!

ஊராட்சியில் நடைபெறும் பணிகளுக்கான வரவு செலவு கணக்குகளை தலைவர் சமர்ப்பிப்பதில்லை இதுகுறித்து கேள்வி எழுப்பினால் விளக்கம் அளிப்பதில்லை, ஊராட்சியில் 90-லட்சம் ரூபாய் நிதி இருந்தும் குடிநீர், சாக்கடை, கழிப்பிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றஞ்சாட்டினார்.


கோவை: ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சியில் நிதி இருந்தும் மக்கள் பணிகளை மேற்கொள்ளாததைக் கண்டித்து வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று மாதாந்திர ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சபரிநித்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 7-வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஊராட்சி மன்றத்தில் நடைபெறும் பணிகளுக்கு வரவு செலவு, கணக்கு விவரங்கள் சமர்ப்பிப்பதில்லை அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்லை என உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். இதனால் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் வெளியேறினர்.



இதனால் ஆத்திரமடைந்த வார்டு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், பிரேமலதா, நர்மதா, மயில்சாமி உள்ளிட்ட நான்கு பேரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஊராட்சியில் நடைபெறும் பணிகளுக்கான வரவு செலவு கணக்குகளை தலைவர் சமர்ப்பிப்பதில்லை இதுகுறித்து கேள்வி எழுப்பினால் விளக்கம் அளிப்பதில்லை, ஊராட்சியில் 90-லட்சம் ரூபாய் நிதி இருந்தும் மக்களுக்கு தேவையான குடிநீர், சாக்கடை, கழிப்பிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.

இது குறித்து வார்டு உறுப்பினர்கள் முறையிட்டால் அலட்சியத்துடன் பதில் பேசுவதாக குற்றம் சாட்டிய உறுப்பினர்கள் இது குறித்து மாவட்ட நிர்வாகம், மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி உள்ளதாகவும், எனவே முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...