ஈமூ கோழி மோசடி வழக்கு - 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை…!

மோசடி தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடந்து வந்தது.


நாமக்கல்லில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி ரூ.4 கோடி மோசடி செய்த 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜம்புகுமார் (52). இவர் நாமக்கல் டவுன் சேலம் சாலையில் எஸ்.ஆர்.ஓய்.ஈமு பார்ம்ஸ் என்ற நிறுவனத்தை கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கினர். இந்த நிறுவனத்தில் சம்பத், ஸ்ரீதர், திருப்பதி, முபாரக் பாஷா, மேகநாதன், இனுக் ஆன்ட்ரூஸ் ஆகியோர் பணியாற்றினர்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கில் லாபம் வழங்கப்படும் என பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்தனர். இதனை நம்பிய 172 முதலீட்டாளர்கள் ரூ.4 கோடியே 24 லட்சத்து 4 ஆயிரத்து 70-ஐ இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், இவர்கள் உறுதி அளித்தபடி லாபம் வழங்காமல் மோசடி செய்துவிட்டு சென்றதாக புகார் எழுந்தது.

இந்த மோசடி தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) நடந்து வந்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில், ஜம்புகுமார், சம்பத், ஸ்ரீதர், திருப்பதி, இனுக் ஆன்ட்ரூஸ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 கோடியே 95 லட்சத்து 60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ்.ரவி தீர்ப்பளித்தார். இந்த அபராதத் தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து அளிக்கவும் உத்தரவிட்டார்.

தீர்ப்பு கூறும் நாளில் நீதிமன்றத்தில் ஆஜராகாத இனுக் ஆன்ட்ரூஸ்க்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முபாரக் பாஷா, மேகநாதன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததை அடுத்து அவர்களை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...