பருவமழை காலங்களில் தங்கு தடை இல்லாமல் சீரான மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோவை: பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் சிறப்பு நிதியை ஒதுக்கி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறார்.
சட்டமன்றத்தில் அறிவித்த கோவை தூத்துக்குடி வரையிலான தார் சாலைகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
தொழில் முனைவோர்களுடன் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டு செயல் வடிவம் கொடுத்து அதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
கோவை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளும் நிறைவேற்ற நிதி ஆதாரங்களை ஒதுக்கி உள்ளார் என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, பருவமழை காலங்களில் தங்கு தடை இல்லாமல் சீரான மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.