கோவை பொள்ளாச்சியில் பலத்த காற்றுடன் மழை: ராட்சத தைல மரம் வேருடன் சாய்ந்த விபத்தில் 2-பெண்கள் படுகாயம்..!

சாலையில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த நகராட்சி ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.


கோவை: பொள்ளாச்சியில் பலத்த காற்றுடன் மழை மகாலிங்கபுரத்தில் ராட்சத தைல மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

அப்போது, மகாலிங்கபுரம் பகுதியில் நகராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டி வளாகத்தில் இருந்த 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த தைல மரம் வேருடன் சாய்ந்து சாலையில் விழுந்தது.



அப்போது, மழைக்கு ஒதுங்கி நின்று கொண்டிருந்த நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் வனிதா மற்றும் தனியார் வங்கி ஊழியர் நந்தினி என்ற இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

பின்னர், அக்கம் பக்கம் உள்ளவர்கள் காயமடைந்த இருவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மரம் விழுந்ததில் அங்கு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நகராட்சி ஊழியர்கள் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். சாலையில் மரம் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...