கோவை மாநகராட்சி 5, 8, 9, 22 வார்டுகளுக்கான குடிநீர் பிரச்சினை குறித்த சிறப்பு கூட்டம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமை வகித்தார். கோவை மாநகராட்சி 5, 8, 9, 22 உள்ளிட்ட 4 வார்டுகளுக்கான குடிநீர் பிரச்சினை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



கோவை: கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட அம்மன் நகரில் அமைந்துள்ள வியாசர் ஆன்மீக மையத்தில், நான்கு வார்டுகளுக்கான குடிநீர் பிரச்சினை குறித்த சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.



கூட்டத்திற்கு, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமை வகித்தார். கோவை மாநகராட்சி 5, 8, 9, 22 உள்ளிட்ட 4 வார்டுகளுக்கான குடிநீர் பிரச்சினை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த குடிநீரின் அளவு, தற்போது குறைக்கப்பட்டு விட்டதாகவும், முன்பு வழங்கப்பட்டு வந்த அதே அளவு குடிநீரே தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வார்டு வாழ் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

52 லட்சத்துக்கு பதில் 36 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வினியோகம்...!



அப்போது கூட்டத்தில் 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு பேசுகையில், கோவை மாநகராட்சி 5, 9, 22 உள்ளிட்ட மூன்று வார்டுகளுக்கும் சேர்த்து 52 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது ஆனால், தற்பொழுது 36 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

குடிநீர் போதுமான அழுத்தத்தில் வழங்கப்படாத காரணத்தால் குடிநீரை மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏற்றி வினியோகம் செய்வது சிரமமாக உள்ளது. இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும், என்றார்.

விரைவில் தீர்வு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

கூட்டத்தில் 5வது வார்டு மாமன்ற உறுப்பினர் நவீன் குமார், 8வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஜான்சன், உதவிப் பொறியாளர் ராதா, குடியிருப்போர் நலச் சங்க தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...