கோவையில் நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறிய இருவர் கோவை மற்றும் சென்னை சிறையில் அடைப்பு…!

நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறிய குற்றத்துக்காக, மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில், இருவரை சிறையில் அடைக்க உத்தரவு பெறப்பட்டு சென்னை மத்திய புழல் சிறைய மற்றும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்கிற மொட்டை கார்த்தி (36). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர், கடந்த டிசம்பர் 21ஆம் ஆண்டு, "இனிமேல் எந்த குற்றமும் செய்யமாட்டேன்" என நன்னடத்தை பிணைய பத்திரத்தை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 20ஆம் தேதி பிணைய பத்திரத்தை மீறி அடிதடி வழக்கில் ஈடுபட்டதாக அவர் மீது தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பேரூர் நிர்வாகத்துறை நடுவர் முன் அவரை ஆஜர்படுத்திய போலீசார் பிணைய பத்திரத்தை மீறிய குற்றத்திற்காக அவரை 136 நாட்கள் சிறையில் அடைக்க கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல், ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிருஷ்ண பிரகாஷ் (32) என்பவர் எழுதிக் கொடுத்த ஓராண்டு நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி, கடந்த மே மாதம் அடிதடி வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். அவரையும் மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் பேரூர் நிர்வாகத்துறை நடுவர் உத்தரவின் பேரில் 136 நாட்கள் சிறையில் நாட்களை கழிக்க வேண்டும் என்ற உத்தரவு பெறப்பட்டு சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...