திருப்பூர் பழைய பேருந்து நிலையம்; கருணாநிதி பெயர் வைக்க வலுக்கும் எதிர்ப்பு..!

மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் திமுக மற்றும் கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மை பலத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனை அடுத்து, மாமன்ற கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டுவது தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக - திமுக உறுப்பினர்களிடையே அமளி ஏற்பட்டது.



திருப்பூர் மாநகராட்சி அலுவலக மாமன்ற கூட்டரங்கில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், கடந்த மாமன்ற கூட்டத்தொடரின் போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து இருந்த நிலையில் அதிமுக மற்றும் பாஜக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அதிமுக மாமன்ற உறுப்பினர் அன்பகம் திருப்பதி கடந்த கூட்டத்தொடரில் அதிமுக மற்றும் பாஜக எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், மாமன்ற தீர்மான புத்தகத்தில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டு தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.



இதற்கு திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் திமுக மற்றும் கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மை பலத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கூறி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனை அடுத்து, மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

கடந்த ஆட்சி காலத்தின் போது திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க வாங்கிய பேட்டரி வாகனங்களில் பெருமளவு ஊழல் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும், இதனை விசாரிக்க தனி குழு நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் கட்டணம் விதித்திருக்கும் நடை முறையை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரிடம் கோரிக்கை வைத்தார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...