விவசாய நிலத்தில் ஏற்கெனவே யானைகள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்து வரும் நிலையில், தற்போது சிறுத்தை ஆடு, மாடுகளை அடித்து கொன்று வருவதாக, மலைவாழ் மக்கள் வனத்துறையினரிடம் சிறுத்தையை பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கல்கொத்திபதி மற்றும் நல்லூர் வயல் பகுதிகளில், ஆடு, மாடுகளை அடித்து கொல்லும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேரூர் தாலுகாவை சேர்ந்த மத்வராயபுரம் கிராமம் அருகில், கல்கொத்திபதி, நல்லூர் வயல் பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கூறியதாவது:-
"விவசாய நிலத்தில் ஏற்கனவே யானைகள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்து வருகின்றன. தற்போது சிறுத்தை ஒன்று ஆடு, மாடுகளை அடித்துக் கொன்று வருகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
வனத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடவடிக்கை இல்லை. எங்கள் வாழ்வாதாரத்தை திரும்ப பெற வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறுகையில், "பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். அதுகுறித்து விசாரிக்கப்பட்டது. அப்பகுதியில் நடமாடுவது சிறுத்தைதானா என்பது குறித்து கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. வனவிலங்காக இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.