நீலகிரியில் தொடர் மழையால் ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..!

மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் இதுவரை பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. அபாயகரமாக உள்ள மரங்கள் குறித்து பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தந்தால் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.


நீலகிரி: ஊட்டியில் பலத்த காற்றுடன் பெய்து வரும் மழையால் பல இடங்களில் ராட்சத மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தேவாலா, 103 மி.மீ., அவலாஞ்சி, 93 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை, 9 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்சமாக, 14 டிகிரி செல்சியசாகவும் உள்ளது. ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஊட்டி-கூடலூர் சாலையில் காமராஜர் சாகர் அணை அருகே சாலையில் குறுக்கே மரம் விழுந்தது.

அதேபோல், கிளன்மார்கன், பார்சன்ஸ்வேலி, கோரகுந்தா, அவலாஞ்சி சாலைகளில் ஆங்காங்கே ராட்சத மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.

இதுகுறித்து ஆட்சியர் அம்ரித் கூறுகையில்,"மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் இதுவரை பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை, 42-மண்டல குழுக்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அபாயகரமாக உள்ள மரங்கள் குறித்து பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தந்தால் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...