இந்த பேரணியில் பெண் சிசு கொலைகள் தடுப்பது, குடும்ப நலம் ஏற்போம், தாய் சேய் நலம் காப்போம், பெண்ணின் திருமண வயது 21-ஆண்களின் திருமண வயது 25 என மருத்துவ, செவிலியர் மாணவ-மாணவிகள் பதாகைகள் ஏந்தியபடி சுமார் 3-கிலோ மீட்டர் தூரம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை: உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கோவையில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

உலக மக்கள் தொகை நாள் ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகாதார துறை அலுவலகத்தில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உறுதிமொழி ஏற்று, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் பெண் சிசு கொலைகள் தடுப்பது, குடும்ப நலம் ஏற்போம், தாய் சேய் நலம் காப்போம், பெண்ணின் திருமண வயது 21-ஆண்களின் திருமண வயது 25 என கோவையை சேர்ந்த மருத்துவ, செவிலியர் மாணவ மாணவிகள் பதாகைகள் ஏந்தியபடி சுமார் 3-கிலோ மீட்டர் தூரம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா,சுகாதார அலுவலக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.