தெற்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ வளா்ச்சிப்பணிகள்‌ குறித்து கோவை‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு..!

வார்டு எண்‌.100-க்குட்பட்ட மேட்டூர்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில்‌ ரூ.15.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அங்கன்வாடி மையம்‌ கட்டடம்‌ கட்டும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை‌ மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில்‌ தூய்மைப்பணிகள்‌ மற்றும்‌ வளா்ச்சிப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தார்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்.94-க்குட்பட்ட சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ தூய்மைப்பணியாளர்களுக்கான வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகளில்‌ குப்பை தரம்‌ பிரிக்கும்‌ பணிகள்‌ குறித்தும்‌, தூய்மைப்‌ பணியாளர்கள்‌ முகக்கவசம்‌, கையுறைகள்‌ அணிந்து பணிகளில்‌ ஈடுபடுமாறும்‌, மாநகராட்சியில்‌ 100 வார்டுகளிலும்‌ பொதுமக்களிடம்‌ குப்பைகளை தரம்‌ பிரித்து வழங்க தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களிடமிருந்து குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து பெறவேண்டுமென மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



அதனைத்தொடர்ந்து, வார்டு எண்‌.96க்குட்பட்ட சுந்தராபுரம்‌ தக்காளி மார்க்கெட்டில்‌ ஆய்வு செய்து மார்க்கெட்டில்‌ வியாபாரிகளுக்கான கடைகள்‌ அமைத்து தக்காளி மார்க்கெட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்ட பின்னர்‌, வார்டு எண்‌.95க்குட்பட்ட திருமலை நகரில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்‌கீழ் (TNSUDP) சாலை அமைக்கும்‌ பணியினை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து விடுபட்ட பகுதிகளில்‌ தார்‌ சாலை அமைக்க திட்டமதிப்பீடு தயார்‌ செய்ய பொறியாளருக்கு அறிவுறுத்தியதைத்‌ தொடர்ந்து, வார்டு எண்‌.100-க்குட்பட்ட மேட்டூர்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில்‌ ரூ.15.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அங்கன்வாடி மையம்‌ கட்டடம்‌ கட்டும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும்‌, விரைவாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்‌.





இந்த ஆய்வின்போது, தெற்கு மண்டல தலைவர்‌ தனலட்சுமி, உதவி ஆணையர்‌ அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி, ஆளுங்கட்சித்தலைவர்‌ கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ அப்துல்‌ காதர்‌, அஸ்லாம்‌ பாஷா, சரளா, உதவி பொறியாளர்‌ சபரீஸ்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ இராமு மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...