திருப்பூரில் கள்ளக்காதலியிடம் இருந்து கணவனை மீட்டுத் தரக்கோரி பெண் தர்ணா..!

பலமுறை புகார் அளித்தும் கணவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால், மனமுடைந்த மனைவி தனது கணவனை கள்ளக்காதலியிடம் இருந்து மீட்டு தரக்கோரி திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


திருப்பூர்: திருப்பூரில் கள்ளக்காதலியிடம் இருந்து தனது கணவரை மீட்டு தரக்கோரி மனைவி காவல் நிலையத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் சுமதி, வெங்கடேஷ் தம்பதியினர் இவர்களுக்கு 17 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே, வெங்கடேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது மனைவி மற்றும் மகளை விட்டு பிரிந்து சென்றவர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்தபெண்ணுடன் பழக்கம் ஏற்பட, அப்பெண்ணுடன் சேர்ந்து பாண்டியன் நகரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சுமதி திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் திருவாரூர் காவல் நிலையம் என மாறி மாறி இருபதுக்கு மேற்பட்ட முறை புகார் அளித்தும் போலீசார் அவரது கணவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது.



இதனால், மனமுடைந்த சுமதி தனது கணவரை அந்த பெண்ணிடம் இருந்து மீட்டு தரக்கோரி திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...