கோவை வால்பாறையில் கனமழை காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் உயர்வு..!

சோலையாறு அணை நிரம்ப இன்னும், 12 அடி நீர்மட்டம் உயர வேண்டியுள்ளது. ஒரே நாளில் அணை நீர்மட்டம் ஆறு அடி உயர்ந்துள்ளது. இதேபோன்று மழை தொடர்ந்து பெய்தால், மூன்று நாட்களில் அணை நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை: வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காற்றுடன் கனமழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்கிறது. இடைவிடாது பெய்யும் கனமழையால், பி.ஏ.பி. அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. காற்றுடன் கனமழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தும், மண் சரிந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இரவு, பகலாக பெய்யும் மழையால், கடுங்குளிர் நிலவுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அக்காமலை, கருமலை பகுதியில் பெய்த கனமழையினால், குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை செக்டேம் நிரம்பியது.

மேல்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 2,726 கன அடி தண்ணீரும், கீழ்நீராறு அணையிலிருந்து, 237 கனஅடி தண்ணீரும் சோலையாறு அணைக்கு திறந்து விடப்படுகிறது.

இதனால், சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று காலை, 148.72 அடி நீர்மட்டம் இருந்தது. ஒரே நாளில் அணை நீர்மட்டம் ஆறு அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு, 5,077 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு, 1,157 கனஅடி தண்ணீர் வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்பட்டது.

சோலையாறு அணை நிரம்ப இன்னும், 12 அடி நீர்மட்டம் உயர வேண்டியுள்ளது. இதேபோன்று மழை தொடர்ந்து பெய்தால், மூன்று நாட்களில் அணை நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):-

வால்பாறை - 57, சோலையாறு - 48, மேல்நீராறு - 81, கீழ்நீராறு - 46, பரம்பிக்குளம் - 27, ஆழியாறு - 9, மேல்ஆழியாறு - 8, காடம்பாறை - 13, பெருவாரிப்பள்ளம் - 32, மணக்கடவு - 12, தூணக்கடவு - 24, சர்க்கார்பதி - 20, வேட்டைக்காரன்புதுார் - 18, நவமலை - 7, பொள்ளாச்சி - 19 என்ற அளவில் மழை பெய்தது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...