மாணவ, மாணவியர்களுக்கு கோவை‌ மாநகராட்சி நிர்வாகத்தின்‌ சார்பில்‌ நான்கு மாத கால சிறப்பு கணினி பயிற்சி வகுப்பு..!

செல்வபுரம்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ பயிலும்‌ பதினோராம்‌ வகுப்பு மற்றும்‌ பனிரெண்டாம்‌ வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின்‌ சார்பில்‌ நான்கு மாத கால சிறப்பு கணினி பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையாளர்‌ தொடங்கி வைத்தார்‌.


கோவை: மாணவ, மாணவியர்களுக்கு கோவை‌ மாநகராட்சி நிர்வாகத்தின்‌ சார்பில்‌ நான்கு மாத கால சிறப்பு கணினி பயிற்சி வகுப்புகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தொடங்கி வைத்தார்‌.



கோவை‌ மாநகராட்சி செல்வபுரம்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ பயிலும்‌ பதினோராம்‌ வகுப்பு மற்றும்‌ பனிரெண்டாம்‌ வகுப்பு மாணவ, மாணவியா்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின்‌ சார்பில்‌ நான்கு மாத கால சிறப்பு கணினி பயிற்சி வகுப்பை ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இன்று (08.07.2022) தொடங்கி வைத்தார்‌.

கோவை மாநகராட்சியிலுள்ள 17-மேல்நிலைப்பள்ளிகளில்‌ பயிலும்‌ 3673-மாணவ, மாணவியாகள்‌ பயன்பெறுகிறார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

பின்னர், இவ்விழாவில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பேசியதாவது,



“தமிழ்நாடு முதலமைச்சர், மாணவர்கள்‌ நலன்‌ கருதி, இல்லம்‌ தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்‌. கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ 17 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள்‌ செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில்‌ பதினோராம்‌ வகுப்பு மற்றும்‌ பனிரெண்டாம்‌ வகுப்புகளில்‌ மொத்தம்‌ 3673 மாணவ, மாணவியர்‌ பயின்று வருகின்றனர்‌.

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எதிர்காலத்தில்‌ கணினி அறிவு இன்றியமையாததாக உள்ளது. எனவே, இம்மாணவர்கள்‌ கணினி தொழில்‌ நுட்பம்‌ மற்றும்‌ பயன்பாடுகள்‌ குறித்து அறிந்து கொள்ளவும்‌, நன்மை தரும்‌ கணினி அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்‌. இந்தியா உலக நாடுகளுக்கு பல்வேறு வகையான மென்பொருள்களை ஏற்றுமதி செய்து சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டமும்‌ சிறந்த தொழில்‌ நகரமாக திகழ்கிறது.

எனவே, மாநகராட்சி நிர்வாகம்‌ சார்பில்‌ கோயம்புத்தூர்‌ SYMK Technologies நிறுவனத்தாருடன்‌ இணைந்து Micro soft Office, Tally 9, மற்றும்‌ PYTHON Computer Language- களில்‌ நான்கு மாத கால சிறப்பு பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது.

ஒரு மாணவருக்கு 32 மணி நேரம்‌ கணினி பயிற்சி வழங்கப்படும்‌. பயிற்சி நிறைவில்‌ மாணவர்கள்‌ குழுவாக இணைந்து ஒரு திட்ட அறிக்கையை சமர்பிக்க வேண்டும்‌. சிறந்த திட்ட அறிக்கை சமாப்பிக்கும்‌ மாணவர்களுக்கு மேலும்‌, சிறந்த கணினி பயிற்சிகள்‌ வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, மாணவர்கள்‌ கூடுதல்‌ நேரத்தை ஒதுக்கி பயிற்றுனர்கள்‌ அளிக்கும்‌ பயிற்சியினை நல்ல முறையில்‌ பயன்படுத்தி, உங்கள்‌ திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்‌.” என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ பேசினார்‌.

அதனைத்தொடர்ந்து, அப்பள்ளியில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு தயாராக இருந்த உணவின்‌ தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்து, தரமாகவும்‌, சுவையாகவும்‌ உணவு வழங்க அறிவுறுத்தினார்‌. பின்னர், பள்ளியின்‌ கழிவறையை ஆய்வு செய்து சுகாதாரமான முறையில்‌ பராமரிக்க சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்‌.

இந்நிகழ்வில்‌ மாநகராட்சி முதன்மை கல்வி அலுவலர்‌ ராஜசேகர பாண்டியன்‌, பள்ளி தலைமையாசிரியர்‌ தூவசகாயம்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌ மாணவ, மாணவியா்கள்‌ கலந்து கொண்டனா்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...