செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நான்கு மாத கால சிறப்பு கணினி பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்.
கோவை: மாணவ, மாணவியர்களுக்கு கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நான்கு மாத கால சிறப்பு கணினி பயிற்சி வகுப்புகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியா்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நான்கு மாத கால சிறப்பு கணினி பயிற்சி வகுப்பை ஆணையாளர் மு.பிரதாப் இன்று (08.07.2022) தொடங்கி வைத்தார்.
கோவை மாநகராட்சியிலுள்ள 17-மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 3673-மாணவ, மாணவியாகள் பயன்பெறுகிறார்கள் என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
பின்னர், இவ்விழாவில் மாநகராட்சி ஆணையாளர் பேசியதாவது,

“தமிழ்நாடு முதலமைச்சர், மாணவர்கள் நலன் கருதி, இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். கோயம்புத்தூர் மாநகராட்சியில் 17 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் மொத்தம் 3673 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எதிர்காலத்தில் கணினி அறிவு இன்றியமையாததாக உள்ளது. எனவே, இம்மாணவர்கள் கணினி தொழில் நுட்பம் மற்றும் பயன்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளவும், நன்மை தரும் கணினி அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியா உலக நாடுகளுக்கு பல்வேறு வகையான மென்பொருள்களை ஏற்றுமதி செய்து சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டமும் சிறந்த தொழில் நகரமாக திகழ்கிறது.
எனவே, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கோயம்புத்தூர் SYMK Technologies நிறுவனத்தாருடன் இணைந்து Micro soft Office, Tally 9, மற்றும் PYTHON Computer Language- களில் நான்கு மாத கால சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
ஒரு மாணவருக்கு 32 மணி நேரம் கணினி பயிற்சி வழங்கப்படும். பயிற்சி நிறைவில் மாணவர்கள் குழுவாக இணைந்து ஒரு திட்ட அறிக்கையை சமர்பிக்க வேண்டும். சிறந்த திட்ட அறிக்கை சமாப்பிக்கும் மாணவர்களுக்கு மேலும், சிறந்த கணினி பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் கூடுதல் நேரத்தை ஒதுக்கி பயிற்றுனர்கள் அளிக்கும் பயிற்சியினை நல்ல முறையில் பயன்படுத்தி, உங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.” என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் பேசினார்.
அதனைத்தொடர்ந்து, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு தயாராக இருந்த உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்து, தரமாகவும், சுவையாகவும் உணவு வழங்க அறிவுறுத்தினார். பின்னர், பள்ளியின் கழிவறையை ஆய்வு செய்து சுகாதாரமான முறையில் பராமரிக்க சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி முதன்மை கல்வி அலுவலர் ராஜசேகர பாண்டியன், பள்ளி தலைமையாசிரியர் தூவசகாயம் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டனா்.