கோவை தளபதியின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் -அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்..!

ஒரு சிலர் கோவை, பொள்ளாச்சியில் கூட்டம் நடத்தி விட்டு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர் என கூறிய அவர், கோவை கலைஞரின் கோட்டையாக இருந்தது. தற்போது தளபதியின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


கோவை: கோவை காளப்பட்டி பகுதியில் சுகுணா ஆடிட்டோரியத்தில் திமுக செயற்குழு கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில்தொழில் வளர்ச்சியை மேம்படுத்த பல கட்ட பணிகளை மேற்கொண்டு, கோவை மாவட்டத்தை ஒரு தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாற்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து நிறைவேற்றி வரும் தமிழக முதலமைச்சருக்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று பிரமாண்டமான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “வருகின்ற 14-முதல் 16-ம் தேதி வரை கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சருக்கு வழியெங்கும் உற்சாகமான வரவேற்பு அளிக்க வேண்டும் எனக் கூறினார்.



நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக 96-விழுக்காடு என்ற மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளோம் எனவும் நமது அடுத்த இலக்கு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

இந்தியாவில் உள்ள முதலமைச்சருக்கு எல்லாம் முதலமைச்சராக நமது தலைவர் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார் என்றும், அவரின் ஆட்சியை இந்தியா முழுவதற்கும் தர வேண்டும் எனவும்,அந்த அளவிற்கு தீர்மானிக்கும் சக்தியாக அவர் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

ஒரு சிலர் கோவை, பொள்ளாச்சியில் கூட்டம் நடத்தி விட்டு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர் என கூறிய அவர், கோவை கலைஞரின் கோட்டையாக இருந்தது. தற்போது தளபதியின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.



நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிக்கு உழைக்க வேண்டும் எனவும் கூறினார். ஒரு பூத்துக்கு 25 பேரை மாற்றுக்கட்சியினரைச் சேர்க்க வேண்டும், அதன் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் கட்சியில் இணைவதை உறுதி செய்ய வேண்டும் என கூறிய அவர்

நாடாளுமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக முதலமைச்சர் கோவையில் பிரச்சாரத்தை துவங்கினார் எனும் அளவிற்கு வரவேற்பு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

முதலமைச்சர் இதயத்தில் கோவைக்கு தனி இடம் உள்ளது எனவும், தொழில் முனைவோரிடம் நேரடியாக 3 மணி நேரம் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டார் எனவும் கூறினார்.

கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அடித்தளம் அமைக்க வேண்டும். சில பேர் சில கருத்துக்களை சொல்லி வருகின்றனர். முதலமைச்சர் மலை. சிலர் மடு, மலையோடு மோத மடுவினர் நினைக்கிறார்கள் என விமர்சித்தார்.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்லும் வழியில் முதலமைச்சரை சந்தித்து கைகளை உற்சாக குலுக்கி பேசினார் என கூறினார். இந்தியாவை வழிநடத்தத் தகுதி வாய்ந்த தலைவர் என்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர். நமக்குள் சங்கடம் இல்லாமல் முதலமைச்சருக்கு உறுதுணையாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.



Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...