கோவையில் முன்னாள் அதிமுக அமைச்சரின் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை..!

சவுரி பாளையம் பிரிவு-உடையாம்பாளையம் சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜின் இரண்டாவது மகன் டாக்டர் இன்பன் வசிக்கும் ராயல் ஸ்கைலைன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 8-பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: தமிழகம் முழுவதும் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்குதொடர்புடைய 49-இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காலையிலிருந்து சோதனை நடத்தி வருகின்றனர்.



அதில், ஒரு பகுதியாக கோவை சவுரிபாளையம் பிரிவு-உடையாம்பாளையம் சாலையில் உள்ள முன்னாள் அமைச்சர் காமராஜின் இரண்டாவது மகன் டாக்டர் இன்பன்வசிக்கும் ராயல் ஸ்கைலைன் என்ற அடுக்குமாடிகுடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



8-பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டாக்டர் இன்பன் கோவையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் கடந்த 9-மாதங்களுக்கு மேலாக இளம் மருத்துவராக பணிபுரிந்து வருவதும்ஸ்ரீ வாசுதேவ பெருமாள் ஹெல்த் கேர் என்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...