கோவையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு “எனது குப்பை எனது பொறுப்பு” ஓவியப் போட்டி மற்றும்‌ வாசக போட்டிக்கு அழைப்பு..!

ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள்‌ வரும்‌ 11.07.2022 திங்கள்‌ கிழமை மாலை 5.00 மணிக்குள்‌ [email protected], [email protected] ஆகிய மின்னஞ்சல்கள்‌ மூலம்‌ ஓவியங்கள்‌ மற்றும்‌ வாசங்களை அனுப்பி வைக்குமாறு மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.


கோவை: கோவை‌ மாநகராட்சி சார்பில்‌ தூய்மையான நகரங்களுக்கான மக்கள்‌ இயக்கம்‌ மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடத்தப்பட்டது.

கோவை‌ மாநகராட்சி சார்பில்‌ தூய்மையான நகரங்களுக்கான மக்கள்‌ இயக்கம்‌ மூலமாக “எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில்‌ மீண்டும்‌ மஞ்சள்‌ பை பயன்படுத்துதல்‌, பொதுமக்களுக்குத் துண்டு பிரசுரங்கள்‌ வழங்குதல்‌, மிதிவண்டி பேரணி, தெரு நாடகங்கள்‌ போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடத்தப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு “எனது குப்பை எனது பொறுப்பு” என்ற தலைப்பில்‌ ஓவியப் போட்டி (Drawing) மற்றும்‌ வாசக போட்டி (Slogan) நடத்தப்படுகிறது.

ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள்‌ எதிர்வரும்‌ 11.07.2022 திங்கள்‌ கிழமை மாலை 5.00 மணிக்குள்‌ [email protected], [email protected] ஆகிய மின்னஞ்சல்கள்‌ மூலம்‌ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

ஓவியங்கள்‌ மற்றும்‌ வாசங்களை மின்னஞ்சலில்‌ அனுப்பும்போது தங்களது பெயர், முகவரி, கைப்பேசி எண், பள்ளியின்‌ விவரம்‌ ஆகியவற்றை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

இப்போட்டிகளில்‌ தோ்வு பெற்றவர்களுக்குப் பரிசுகள்‌ வழங்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...