கோவை தனியார் பள்ளி உள்விளையாட்டு அரங்க மேற்கூரை சரிந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தைகள்..!

மேற்கூரை இடிந்து விழுந்த சமயத்தில் எந்த குழந்தைகளும் அங்கு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இருந்த போதும் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை தனியார் பள்ளி உள்விளையாட்டு அரங்க மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக பள்ளி குழந்தைகள் உயிர் தப்பினர்.



கோவை குனியமுத்தூர் புட்டுவிக்கி சாலையில் நூர்சேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்குத் தேவையான பெரிய இரும்பு பில்லர்கள், இரும்பு கம்பிகளை கொண்டு கூரை அமைக்கும் பணியானது ஜேசிபி எந்திரம் மூலம் நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில் திடீரென மேற்கூரை பெரும் சத்தத்துடன் சரிந்து கீழே விழுந்தது.



இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கம் போல பள்ளி செயல்பட்டு வந்தது. ஏராளமான குழந்தைகள் வழக்கம் போல பள்ளிக்கு வந்திருந்தனர்.



மேற்கூரை இடிந்து விழுந்த சமயத்தில் எந்த குழந்தைகளும் அங்கு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இருந்த போதும் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...